பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி கையளிப்பு

Report Print Ashik in சமூகம்

மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்ட வென்ஸ் ரக அம்புலன்ஸ் வண்டி ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

குறித்த அம்புலன்ஸ் வண்டியினுள் அவசர சிகிச்சை உபகரணங்கள் உள்ளடங்களான பொருட்களுடன் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பயன்பாட்டிற்காக கெப் ரக வாகனமும் சுகாதார அமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers