முன்னாள் போராளி ஒருவருக்கு யாழ். சிறைச்சாலையில் நேர்ந்த கதி!

Report Print Murali Murali in சமூகம்

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள (முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ள) முன்னாள் போராளி ஒருவர் யாழ். சிறைச்சாலையில் மோசமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரசாமி பிரபாகரன் என்பவரே இந்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளார். மோதல் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸாரினால் இவர் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் போராளியான குமாரசாமி பிரபாகரன்,

“இதனையடுத்து 19ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.

சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் முன்னர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒருநாள் முழுவதும் சக்கரநாற்காலியிலேயே இருந்தேன். மலம் கழிக்க கூட முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில், சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மாற்றுத்திறனாளிக்கு உரிய எவ்வித வசதிகளும் இன்றி மிகவும் துன்பப்பட்டதையடுத்து 20ம் திகதி சிறைச்சாலை வைத்தியரின் அனுமதியுடன் யாழ். வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

எனினும், அங்கும் மாற்றுத்திறனாளி என்று பாராது கையை சங்கிலியால் விளங்கிட்டு கட்டிலோடு கட்டியிருந்ததாக, முன்னாள் போராளியான குமாரசாமி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.