மான் இறைச்சி வைத்திருந்த ஆறு பேருக்கு நீதிபதி வழங்கிய உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஆறு கிலோ ஐந்நூறு கிரேம் மான் இறைச்சியை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 6 சந்தேநபர்களுக்கும் தலா 45,000 ரூபா வீதம் தண்டம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க இன்று பிறப்பித்துள்ளார்.

கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிலுள்ள காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கை பயன்படுத்தி மிருக வேட்டையில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

அதில் அனுமதியின்றி காட்டுக்குள் சென்றமை, மான் இறைச்சியை வைத்திருந்தமை மற்றும் அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கை தம்வசம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இதில் முதலாவது குற்றத்திற்காக 10,000ரூபாவும், இரண்டாவது குற்றத்திற்காக 30,000ரூபாவும் மூன்றாவது குற்றத்திற்காக 5,000ரூபாவாக மொத்தமான ஒருவருக்கு தலா நாற்பத்தையாயிரம் ரூபா செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சந்தேகநபர்கள் திருகோணமலை குச்சவெளி ,ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வழக்கு எதிர்வரும் 9ம்மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest Offers