படிக்கச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்டுள்ள நிலை! இராணுவ சிப்பாயின் மோசமான செயல்

Report Print Murali Murali in சமூகம்

14 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கெகிராவ - இலுக்கேகம பகுதியை சேர்ந்த 37 வயதுடை நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அந்த பகுதியிலேயே இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், குறித்த சிறுமி இராணுவ சிப்பாயின் மகளுடன் சேர்ந்து படிப்பதற்காக அவர், வீட்டிற்குச் சென்றிருந்த ​போ​தே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை செய்துள்ள முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Latest Offers