பிரித்தானியா வாழ் இலங்கையர் ஹோட்டலில் செய்த அசிங்கம்! அம்பலமானது ஆதாரங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல துடுப்பாட்ட வீரரும், அவரின் நண்பரும் வெளிநாட்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

வெளிநாட்டு பெண்களின் முறைப்பாட்டுக்கு அமைய துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணவர்த்தனவின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள நபர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனத் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் நேற்று கொள்ளுப்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் நோர்வே நாட்டு பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 26 வயதான அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நேர்வே நாட்டு பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையை கொள்ளுபிட்டி பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு கட்டுநாயக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற நாவல பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த இளைஞன் களியாட்ட விடுதிகளில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Latest Offers

loading...