மகனுக்காக முல்லைத்தீவில் தந்தை செய்யும் செயல்!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானத்துறையில் கல்விகற்கும் மாணவன் ஒருவரின் தந்தை ஆழ்கடலில் ஆபத்தான தொழிலில் ஈடுபட்டுவருதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சக்கரத்தின் ரீப் ஒன்றை மிதப்பியாக பயன்படுத்தி குறித்த தந்தை ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த தந்தையை நேரில் சென்று வினவியபோது அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலையான காலப்பகுதியில் இடம்பெயர்ந்து நான் எனது குடும்பத்துடன் இந்தியா சென்றேன்.

பின்னார் 2014 ஆம் ஆண்டு எனது சொந்த ஊர் முள்ளிவாய்க்காலில் மீள்குடியேறினேன். எனக்கு ஆறு பிள்ளைகள். மூத்த மகன் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றுவருகின்றார்.

குறிப்பாக அவரின் கல்விநிலை பாதிப்படைய கூடாது என்பதில் நான் கவனமாக உள்ளேன்.

எனக்கு தெரிந்தது மீன்பிடித்தொழில்.. ஆனால் ஆழ் கடலில் சென்று மீன்பிடிப்பதற்கு படகு ஏதும் என்னிடம் இல்லை.

இயந்திரப் படகு அல்லது தெப்பப்படகு ஒன்று பெற்றுத்தரும்படி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளிடம் கோரிக்கை பல நாட்களாக விடுத்திருக்கின்றேன்.

ஆனால் இதுவரை எனது தொழிலை மேம்படுத்த எவ்வித உதவியும் எனக்கு கிடைக்கவில்லை.

எனது வாழ்வாதாரத்தை உயர்த்தும் முக்கிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அதனால் நான் இவ்வாறு முயற்சித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Latest Offers