மட்டக்களப்பு மாநகரசபையினால் பாரிய சிரமதான நடவடிக்கைகள்

Report Print Kumar in சமூகம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையினால் பாரிய சிரமதான நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

எதிர்வரும் 02ஆம் திகதி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான பணிகளில் மாநகரசபையின் உறுப்பினர்கள், மாநகரசபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பங்குகொண்டனர்.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதனால் ஆலய வளாகத்தினை தூய்மைப்படுத்தி பக்தர்களுக்கான வசதி வாய்ப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் மேற்கொண்டுள்ளார்.

இதன்கீழான நடவடிக்கையாகவே இன்று சிரமதானம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஏனைய பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஆலய வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் பக்தர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் என்பனவும் தூய்மைப்படுத்தப்பட்டன.