யாழ்.குடா நாட்டில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பில் பரிசோதனை

Report Print Mubarak in சமூகம்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் நாளை சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்படவுள்ளது.

செம்மணி - நாயனர்மார் காட்டுப்பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வை மேற்கொண்ட போது அதில் ஓர் பகுதியில் இருந்து மனித எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன.

இது தொடர்பில் விசாரணை நடத்திய மாவட்ட பொலிஸார் அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை யாழ்.நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கமைய கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் அங்கு அகழப்பட்ட மண்ணையும் முழுமையாக சோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.