வெளிநாட்டில் உள்ளவர்களினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

Report Print Murali Murali in சமூகம்

வெளிநாடுகளில் வாழ்பவர்களே இலங்கையில், போதைப்பொருள் பாவனையை தூண்டுவதாகவும், இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கை போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறியுள்ளது. இது குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

சில வகையான போதைப்பொருட்களை உள்நாட்டில் விற்பதற்காக கடத்திவருகின்றனர். கடந்த வருடம் நாங்கள் 1500 கிலோ கொக்கெய்னை கைப்பற்றியிருந்தோம்.

பெறுமதியான போதைப்பொருளாகும். எனினும், இலங்கையில் இது பயன்படுத்தப்படுவதில்லை. இதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுக்கான தளமாக இலங்கை மாறியுள்ளது என்ற முடிவிற்கு நாங்கள் வரலாம்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் உதவியை பெற தீர்மானித்துள்ளோம். நாங்கள் இந்த அடிப்படையில் செயற்படுகின்றோம்.

இந்த விடயத்தில் நான் எந்த அரசியல் தலையீட்டையும் எதிர்கொள்ளவில்லை. எந்த அமைச்சரும் இது குறித்து என்னுடன் பேசவில்லை.

இந்த நிலைமையை கையாள்வதற்காக விசேட பிரிவுகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். நாங்கள் பலரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்.

வெளிநாடுகளில் வாழ்பவர்களே இதனை தூண்டுவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. சிலர் தங்கள் சிறைகளில் இருந்தவாறே இவற்றை செய்கின்றனர். இது பாரிய பிரச்சினையாக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers