கேரளா கஞ்சாவை விற்பனை செய்த இளைஞர் விளக்கமறியலில்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கொட்பே பகுதியில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சீனக்குடா பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதவான் முன்னலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, சிங்ஹபுர, சங்கம பகுதியைச்சேர்ந்த வி.எம்.எம்.சரத் குமார (28வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers