தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்கும் நிகழ்ச்சி

Report Print Kumar in சமூகம்

கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடத்திய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு நேற்று விளாவட்டவான் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

அழிந்துவரும் தமிழர்களின் பண்டைய விளையாட்டுக்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த விளையாட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

குறிப்பாக யுத்த சூழ்நிலையில் அழிந்த பல்வேறு விளையாட்டுக்களை இதன்போது நினைவூட்டும் வகையில் நடைபெற்றது.

இந்த பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய முறைப்படி அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன், விளையாட்டில் பங்குகொண்டவர்களுக்கு பாரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.