கண்டாவளை கல்வி வலயத்தின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை

Report Print Suman Suman in சமூகம்

கிளி.முருகானந்த ஆரம்பப் பாடசாலையில் பிரான்ஸ் முரசுமோட்டை மக்கள் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை (Smart Class Room) இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த வகுப்பறை, பாடசாலை முதல்வர் இராஜேஸ்வரி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் முதலாவது திறன்விருத்தி வகுப்பறையாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், பாடசாலையின் முன்னாள் அதிபர் துரைராசா, கோட்டக்கல்வி பணிப்பபாளர் தர்மரத்தினம், பிரான்ஸ். முரசு.ம.ஒன்றியத்தைச் சேர்ந்த சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறையை திறந்து வைத்துள்ளனர்.

மேலும், முரசுமோட்டை கிராமத்தின் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பிரதேசசபை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.