திருகோணமலை வளாக விஞ்ஞான பீடத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டடம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

சுமார் 340 மில்லியன் ரூபா செலவில் இந்த கட்டடம் நான்கு மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், அமைச்சர் விஜேதாச ராஜபக்ச , கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம , பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் விஜேவிக்ரம, கிழக்குப் பல்கலைக்கழக வளாக முதல்வர் வீ.கனகசிங்கம் உட்பட திணைக்கள உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.