இலங்கை சென்ற சுற்றுலா பயணியின் கமராவில் சிக்கிய அரிய காட்சி!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையிலுள்ள புந்தல வனவிங்கு பூங்காவில் பெரிய மான் ஒன்றை பாரிய அளவிலான மலைப் பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி கமராவில் பதிவாகி உள்ளது.

பூங்காவுக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நன்கு வளர்ந்த மான் ஒன்றை பாம்பு முழுமையாக விழுங்கியுள்ளது. இதற்காக சுமார் அரை மணித்தியாலங்களை பாம்பு செலவிட்டுள்ளதாக குறித்த சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.