யாழில் இருந்த சாத்திரக்காரர்களை கைது செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்

Report Print Sumi in சமூகம்

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரக்காரர்களை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

யாழ்.நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்து குறித்த சாத்திரக்காரர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைத் தந்த இவர்கள் ஐந்து பேரும், கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.