நூதன முறையில் செய்யப்பட்டு வந்த வர்த்தகம்! சுற்றிவளைப்பின் பின் வெளிவந்த தகவல்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் நகரில் 410 மில்லிகிராம் போதைப்பொருளுடன் நபரொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரின் உடம்பில் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் வர்த்தகம் மிகவும் நூதன முறையில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியந்துள்ளது.

மேலும் இந்த வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹட்டன் - குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.