இலங்கை ஆதிவாசி தலைவரின் திடீர் முடிவு

Report Print Steephen Steephen in சமூகம்

எதிர்காலத்தில் உலக பழங்குடியினர் தினத்தை கொண்டாடப் போவதில்லை எனவும் அதற்கு செலவாகும் தொகையை கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போவதாகவும் இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி,வனஸ்பதி வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

தமன, கொட்டபக்கினிய கிராமத்தில் இன்று நடைபெற்ற உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13 கூட்டங்களை நடத்தி, ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளோம். எனினும் பல ஆதிவாசிகளின் கிராமங்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இனிவரும் காலங்களின் ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடப் போவதில்லை. அதற்கு செலவிடப்படும் பணத்தை கிராமத்தின் பிரதான பிரச்சினைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த செலவிட நான் தீர்மானித்துள்ளேன்.

ஆறு வருடங்கள் செல்லும் போது ஆறு ஆதிவாசி கிராமங்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம். எங்களது பரம்பரை கலாசாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எமது ஆதிவாசிகள் பட்டினியை போக்க வேண்டும்.

அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்கினால், அது மிகவும் முக்கியம் என வன்னிலா எத்தோ கூறியுள்ளார்.