இலங்கை பெண்ணின் புதிய கண்டுபிடிப்பு! உலக மக்களுக்கு கிடைத்த தித்திப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை பெண்ணொருவர் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொரியாவில் நடைபெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சி போட்டியில் இலங்கை பெண் தயாரித்த புதிய வகையான ஐஸ் கிரீம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

தெஹிஓவிட்ட அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த கே.டீ.பிரியந்தி மல்லிக்கா என்ற பெண் தயாரித்த ஐஸ் கிரீமிற்கே இவ்வாறு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

பலாப்பழத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம் போட்டி நடுவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதற்கமைவாக அந்த போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இலங்கைப் பெண் புதிய முயற்சியை மேற்கொண்டு உலகப் போட்டிக்கும் செல்ல சந்தர்ப்பம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட மல்லிக்கா,

இலங்கையில் வருடத்திற்கு 48 கோடி பலா பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் 11 கோடி பலாப்பழங்கள் மாத்திரமே பயன்பாட்டிற்கு பெற்றுகொள்ளப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் சுவையான மற்றும் இயற்கையான உணவான பலாவில் புதிதாக ஒன்றை செய்யத் திட்டமிட்டேன்.

அதனொரு முயற்சியாகவே பலாப்பழ ஐஸ் கிரீம் தயாரிப்பு. இதற்கு மேலதிகமாக கேக், பிஸ்கட் உட்பட 600 வகையான உணவுகளை பலாப்பழத்தில் தயாரிப்பேன். இந்த முயற்சினை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் பலருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும்.

எனது புதிய முயற்சிகளை முன்னெடுக்க பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தேன். பொருளாதார சிக்கல்களினால் பாதிக்கப்பட்ட நான் பல முயற்சிகளின் பின்னரே வெற்றி பெற்றேன் என பிரியந்தி மல்லிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers