இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் தூத்துக்குடி இ.சி.ஆர் வீதியில் வாகன சோதனையில் தூத்துக்குடி சுங்கப்பிரிவினர் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன்போது அதில் 4 பொதிகளில் 104 கிலோ மதிப்புள்ள கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 15 இலட்சம் (இந்திய ரூபாய்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரில் பயணித்த மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த பாண்டி மற்றும் நரிமேடு மருதுபாண்டி நகரைச் சேர்ந்த ராஜாஜி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மதுரையைச் சேர்ந்த அசோக் என்பவரை சுங்கப்பிரிவினர் தேடி வருவதாக தமிழக் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.