குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் போதை ஒழிப்பு செயற்றிட்டம்

Report Print Mubarak in சமூகம்

போதையற்ற ஆரோக்கியமான கிண்ணியா" செயற்திட்டத்தின் முதற்கட்ட களமுன்னெடுப்புக்கள் குறிஞ்சாக்கேணிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த செயற்றிட்டத்தை இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளை, பள்ளிவாசல்கள் ஒன்றியம் மற்றும் பிரதேச மஸ்ஜித்கள் இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, கடை கடையாக சென்று வர்த்தகர்களை தெளிவுப்படுத்தியதுடன், ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விற்பனை விநியோகத்தினை தடுக்கும் முதற்கட்ட நகர்வில் சிகரட், பீடி ,புகையிலை முதல் மது , கஞ்சா உள்ளிட்ட சகல போதைப்பொருள் விற்பனையாளர்கள் கடை உரிமையாளர்கள் 36பேர்கள் இனங்காணப்பட்டு கடைகடையாக நேரடியாக களத்தில் சென்று உரியவர்களை சந்தித்து உபதேசத்துடன் செயற்திட்டம் விளக்கப்படுகின்றது.

மேலும், போதையற்ற மாதிரி பிரதேசமாக இங்கு அமுலாக்கப்பட்டு சிறந்த பகுதியாக காண்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.