ஆறு வருடங்களாக தற்காலிக வீட்டில் வசிக்கும் 52 குடும்பங்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு வேனாவில் மற்றும் புதியகுடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் 52 குடும்பங்கள் ஆறு வருடங்களாக பாதுகாப்பற்ற தற்காலிக ஓலைக்குடிசைகளில் வசித்துவருவாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த 1186 குடும்பங்களுக்கு அதிகமானவர்கள் 2012 ஆம் ஆண்டு புதுகுடியிருப்பு பிரதேச செயல் பிரிவில் மீள்குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் போரினால் கணவனை இழந்த பெண்களும், பிள்ளைகளை இழந்த தாய்மார் என 52 குடும்பங்கள் உதவிகள் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற தற்காலிக வீடுகளில் ஆறு வருடங்களாக வசித்துவருவதாக சமுக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது எனது கணவன் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்.

வலையம் 4 புனர்வாழ்வு முகாமில் குழந்தையை பெற்றெடுத்த நான் 2012 புதுக்குடியிருப்பில் மீள்குடியேறினேன்.இன்று வரை தற்காலிக வீட்டில் வசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகள் புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதினால் தனக்கு நிரந்தர வீடு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.