மூன்று சகோதரிகளை மிகவும் கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொனராகலை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டின் ஜூலை மாதம் வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த 48 வயதான நபர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான மூன்று சிறுமிகளை மிக மோசமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

மொனராகலை கொட்டியாகல கம்மல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 48 வயதான நபர் ஒருவரை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

குறித்த சிறுமிகளின் பெற்றோரது வறுமை நிலையை பயன்படுத்திக் கொண்டு சிறுமிகளை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரி 10 வயதாக இருக்கும் போது முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்த குடும்பத்தின் ஒன்பது வயதான இளைய மகளை குறித்த நபர் கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திய போது சிறுமிகளின் பெற்றோர் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும், பொலிஸார் சிறுமிகளிடம் நடத்திய விசாரணைகளின் போது அனைத்து விடயங்களும் அம்பலமாகியுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.