அர்ஜூன் அலோசியஸின் பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Report Print Ajith Ajith in சமூகம்

அர்ஜூன் அலோசியஸின் பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸின் கணக்கு விபரங்களை தருமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம், 15 வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2018ஆம் ஆண்டுக்காலப்பகுதியின் முழுமையான விபரங்களையே நீதிமன்றம் கோரியுள்ளது.

இதேவேளை டபில்யூ. எம். மெண்டிஸ் கொம்பனி 2015ஆம் ஆண்டின் தமது கொடுப்பனவு சீட்டுக்கள் மற்றும் பற்றுச்சீட்டுக்கள் என்பவற்றை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஸரிஸின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மேலாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியலை நீதிமன்றம் ஆகஸ்ட் 23ஆம் திகதி வரை நீடித்துள்ளது.