கொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சர்! மகிழ்ச்சியில் மாணவர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளாந்தம் ரயிலில் பயணிப்போர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். விசேடமாக உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தனியார் வாகனங்கள் தனிப்பட்ட ரீதியில் உதவி வருகிறன.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது தனிப்பட்ட வாகனத்தில், உயர்தர மாணவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளார்.

போக்குவரத்து பிரச்சனை காரணமாக பரீட்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு போய் விடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நேரடியாக களத்தில் ஈடுபட்ட ஹர்ஷ டி சில்வா, மாணவர்களுக்காக வாகனத்தை தானே ஓட்டிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து, நன்மை அடைத்த மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.