மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை! இலக்கு வைக்கப்பட்டுள்ள 7 பாதுகாப்பு படைத் தலைமையகங்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை ஆயுர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனமும், இலங்கை இராணுவமும் இணைந்து 135,000 மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை கொழும்பில் நடத்தியுள்ளன.

குறித்த நிகழ்ச்சித் திட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூலிகைத் தாவரங்களான சந்தனம், சிவப்பு சந்தனம், கற்றாளை, பவத்தா, மாதுளை போன்ற தாவர கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ விவசாய பணியகத்திடம் இந்த 135,000 மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடி வகைகளை இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் முதலில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி முதற்கட்டமாக இலங்கையிலுள்ள 7 இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகங்களை இலக்கு வைத்து இந்த கன்றுகள் நாட்டப்படவுள்ளன.