வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

Report Print Shalini in சமூகம்

மது போதையில் வாகனம் செலுத்திய இலங்கையர் ஒருவரை குவைட் பொலிஸார் கைது செய்துள்ளனர் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கையர் அதிக மதுபோதையில் கொங்ரீட் கலவை செய்யும் வாகனம் ஒன்றை செலுத்திச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பலமுறை குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்தே குறித்த நபரை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை சாரதி தொடர்பில் குவைத் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.