இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு உதவும் இந்திய அரசாங்கம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

இந்திய அரசாங்கம் இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு பாரிய நிதி உதவிகளை செய்து வருகின்றதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்திய அரசாங்கம் புஸ்ஸல்லாவ சரஸ்வதி பாடசாலைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு 95 மில்லியன் ரூபா நிதியை வழங்க முன்வந்தது.

எனினும் அந்த நிதிக்கு வட் வரி கட்ட வேண்டியநிலை ஏற்பட்டது. அப்பொழுது நான் மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடனும் இது தொடர்பாக பேசிய பொழுது அவர்கள் மத்திய மாகாண நிதி நிலைமை காரணமாக அதனை செலுத்த முடியாதுள்ளதாக கூறினார்கள்.

எனவே இந்த நிதியை எப்படியாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோரிடம் கலந்துரையாடியதன் அடிப்படையில், அந்த வட் வரியை கல்வி அமைச்சின் மூலமாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கம் இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு பாரிய நிதி உதவிகளை செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.