இரண்டு காதல் ஜோடி செய்த காரியம்! பொலிஸ் அதிகாரி எச்சரிக்கை

Report Print Manju in சமூகம்

காட்டுப்பகுதியில் மது அருந்திய இரண்டு காதல் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இரு யுவதிகளும் 22 வயதுடைய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை நகரிலிருந்து மகாவலி அணைக்கட்டுப் பிரதேசத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இரண்டு காதல் ஜோடி மது அருந்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். அங்கிருந்த இரண்டு காதல் ஜோடியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயணித்த காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்சரித்து விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.