மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Report Print Aasim in சமூகம்

இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை இரண்டு ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை ஒரு ரூபாவினால் அதிகாிக்கவுள்ளது.

அதன் பிரகாரம் நாளை முதல் 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 157 ரூபாவாகவும் சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 130 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.