இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி!! ஸ்தம்பிதம் அடையுமா நாடு?

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாகாண தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.

சில தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டம் தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு, சேவை கட்டணம் அதிகரித்தமை உட்பட பேருந்து தொழில்துறை முகம் கொடுத்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனடிப்படையில் பணி பகிஸ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஸ்டென்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேசி தீர்வு பெற முயற்சிப்பதாகவும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் பணி பகிஸ்கரிப்பு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில்வே துறைசார் தொழிற்சங்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.