யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி பரிதாபமாக மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பகுதி ஒன்றில் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்.காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற மாணவன் ஒருவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ். யாழ்ற்ரன் கல்லூரியில் 10ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 15 வயதான பரலோகநாதன் டனுசியன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை மாணவர்களுடன் குளிக்க சென்ற டனுசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாணவர்கள் சேர்ந்து காரைநகர் ஜே 41 பிரதேசத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளனர். இதன் போது திடீரென ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீரில் குளிக்க சென்ற ஏனைய இரு மாணவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த பரலோகநாதன் டனுசி யன் கடலில் மூழ்கி அகால மரணம் அடைந்தமை யாழ். குடாநாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.