சகோதரரை கொலை செய்த நபருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Steephen Steephen in சமூகம்

கேகாலை - வரக்காபொல, பதுவத்தை பிரதேசத்தில் நேற்று மாலை ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டை ஒன்றினால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தோலலங்கமுவ, புருன்னாவ பிரதேசத்தைச் சேர்நத 32 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாக குறிப்பிடப்படும் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.