இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தெற்கை சேர்ந்த யுவதியும் இளைஞனும் வடக்கில் கைது!

Report Print Steephen Steephen in சமூகம்

வவுனியா - மாங்குளம் பகுதியில் 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் ட்ரமடோல் போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்திச் சென்ற வேளையில் செட்டிக்குளம்பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 வயதான பெண்ணும், 18 வயதான இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மாத்தளை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு, போதைப் பொருள் கடத்தும் பாதாள கும்பலுடன் தொடர்பு உள்ளது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மது, குணா என்ற முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்களால் டுபாயிலிருந்துஅனுப்பிவைக்கப்பட்ட 70 ஆயிரம் போதை மாத்திரைகள் மன்னாருக்கு கடல் வழியாகவந்துள்ளன.

அவற்றை கொழும்புக்கு கடத்திச் செல்லும் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வலி நிவாரண மாத்திரையான இது 50 மில்லி கிராம் அளவே மருத்துவரின் அனுமதியுடன்வழங்க முடியும். ஆனால் கைப்பற்றப்பட்ட 70 ஆயிரம் மாத்திரைகளும் 200மில்லிக்கிராம் அளவுடையவை.

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கே அவற்றைக் கடத்திச் சென்றதாகசந்தேகநபர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இதே மாத்திரைகள் வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனைசெய்யப்படுவதாகவும் விசாரணைகளின் மூலம் தகவல் கடைத்துள்ளன என்று பொலிஸார்மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள் - சுமி