கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இன்று காலை 10 தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒருவர் மஹபாகே பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவராகும். மற்றவர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவராகும்.

இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 65 லட்சம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.