நெளுக்குளம் ஆயுள்வேத வைத்தியசாலையில் ஆங்கில மருத்துவம் செய்ய தடை

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெளுக்குளம் பகுதியிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலையில் ஆங்கிலமருத்துவம் செய்ய முடியாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்பணிமனையினர் அறிவித்துள்ளனர்.

தகவல் அறியும் சட்டத்தினூடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குஅனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு, அனுப்பப்பட்ட பதில் கடிதத்திலயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது பெயரை பயன்படுத்தி மெடிக் கிளினிக் எனப் பெயர் இடப்பட்டுள்ளது தவறு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் ஆயுள்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது (31.07.2017) வரை செல்லுபடியாகும்.

குறித்த சிகிச்சை நிலையம் எமது சுதேச மருத்துவ திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் மீள் பதிவு செய்ய சிபாரிசு செய்யப்படும் என்று தகவல் அறியும் சட்டத்தினூடாக ஆயுள்வேத ஒருங்கிணைப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.