27 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

Report Print Sumi in சமூகம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 27 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று மாலை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர் எனவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.