முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டத்திற்கு அதிகரிக்கும் ஆதரவுகள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக இன்றுடன் ஒன்பதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவர்களின் போராட்டத்திற்கு இன்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் உப தவிசாளர் க.ஜனமேயெயந்த் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள் சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.

இதன் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது பிரதேசம் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருவதானது எமது எதிர்கால இருப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளதுடன், தற்போது இங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவ சங்கத்தினரின் கோரிக்கையும் எமது கடல் வளத்தை பாதுகாக்குமாறும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்ய கோரியுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

மேலும் இவர்களுடைய கோரிக்கையின் நியாயமானவை. இந்த கோரிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் மத்திய அமைச்சர் தலைமையிலான பேச்சுக்களின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.