வவுனியாவில் அதிகாலையில் கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சாந்தசோலை பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 9.30 மணியளவில் சாந்தசோலை, கிறசர் வீதியிலுள்ள வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ள உரிமையாளர் இன்று காலை 5 மணியளவில் வியாபார நிலையத்தினை திறப்பதற்குச் சென்றுள்ளார்.

இதன்போது தனது வியாபார நிலையம் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸார் திருட்டு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.