சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Report Print Kamel Kamel in சமூகம்

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிலர் நாள் ஒன்றுக்க 2500 ரூபா கையூட்டலை வருமானமாக ஈட்டுகின்றார்கள் என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அண்மையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இவ்வாறு கையூட்டல் பெறுவது தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைகளில் பணிகள் சீரான முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதனை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஓர் பெண் சிறைச்சாலை அதிகாரி கைதிகளிடமிருந்து பெருந்தொகை கையூட்டலாக பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 12 அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.