அரசாங்கத்தின் செயற்பாடு! சாதாரண குடிமகனின் ஆத்திரம்! இரண்டாக உடைந்த தொலைக்காட்சி

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஆத்திரம் காரணமாக தொலைக்காட்சியை உடைத்துள்ளார்.

சமகாலத்தில் அதிகரிக்கப்பட்ட வரி நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாத நபர் ஒருவரே இவ்வாறு தொலைக்காட்சியை உடைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 14 அங்குல தொலைக்காட்சியை இரண்டாக அடித்து உடைத்துள்ளார்.

தொலைக்காட்சி உடைத்த நபர் சாதாரண தொழில் பார்க்கும் ஒருவராகும். அவர் திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும்.

அவர் தினமும் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும் பழக்கம் கொண்டவராகும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் செய்தி பார்ப்பதற்கு அவர் தவறுவதில்லை.

இவ்வாறான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்து செய்தி பார்ப்பதற்கு அவர் ஆரம்பித்துள்ளார்.

அன்றைய தினம் வெளியாகிய செய்திகளில் அதிகமானவைகள் வரி தொடர்பிலானவைகளாகும்.

செய்தியின் அரைவாசி வரி தொடர்பில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நபர் பெரிய கட்டை ஒன்றை கொண்டு வந்து தொலைக்காட்சியை இரண்டாக உடைத்துள்ளார்.

அதிக கடன் சுமை காரணமாக சமகால அரசாங்கம் புதிய வரிகளை அறிமுகம் செய்து வருகின்றமையினால், நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.