பொறுப்பற்ற செயற்பாட்டால் ஏற்பட்ட பாரிய பின் விளைவு

Report Print Vethu Vethu in சமூகம்

பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட ரயில்வே திணைக்களத்திற்கு மாத்திரம் இன்றி இலங்கை போக்குவரத்து சபைக்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு இடம்பெற்ற நாட்களில் சீசன் டிக்கெட்டுகள் கொண்ட ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இலவசமாக பயணித்தனர்.

நாள் ஒன்றுக்கு 80000 கிலோ மீற்றருக்கும் அதிகமாக தூரத்திற்கு, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயணிக்க நேரிட்டமையினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்கள் பொறுப்பற்ற வகையில், திடீரென தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமையால் இலட்சணக்கான பயணிகள் பெரித்தும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு நாட்களாக ரயில்வே ஊழியர்கள் தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.