வெலிக்கடை சிறையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள பெண்கள்! மோசமான செயற்பாடுகள் அம்பலம்

Report Print Vethu Vethu in சமூகம்

வெலிக்கடை சிறைச்சாலையின் கூறை மீது ஏறி 10 பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளமையால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது. கைதிகளுக்கு வெளியே இருந்து கொண்டுவரப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டது.

வெளியே உணவு பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பெண்கள் உரிய அளவை விடவும் அதிகளவு உணவு பெற்றுக் கொள்வதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன் ஊடாக தடை செய்யப்பட்ட பொருட்கள் வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவிற்கு கிடைக்க கூடும் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக உணவு மட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பெண்கள் சிலர் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்கு வெலிக்கடை ஆண்கள் பிரிவு அதிகாரிகள் உட்பட அங்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்த பெண் கைதிகள் அனைவரும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களாகும்.

கூறை மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்த பெண்கள் தங்கள் வழக்குகளை விரைவில் நிறைவுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.