இலங்கையின் சில்லறை நாணயத்தாள் தொடர்பில் புதிய தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் ரூபா மற்றும் சில்லறை நாணயத்தாள்களை சீனாவின் அச்சு நிறுவனம் ஒன்றே அச்சிட்டு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தெ மணிக்கொன்றோல் டொட் கொம் என்ற இணையம் இதனை தெரிவித்துள்ளது.

சீனாவின் பேங்நோட் அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் லீ குய்சேங், சீனாவின் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் செய்தித்தாள் ஒன்றில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக இந்திய இணையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி குறித்த நிறுவனம், இலங்கை, மலேசியா, நேபாளம், பங்களாதேஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கான நாணயத்தாள்களை அச்சிடுகின்றது.

உலகில் நாணயத்தாள் அச்சிடலில் பாரிய நிறுவனமாக கருதப்படும் இந்த சீன நிறுவனத்தில் 18ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.10இற்கும் மேற்பட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் அந்த நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளன.