பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம்

Report Print Mubarak in சமூகம்

நேர அட்டவணையை சரியான முறையில் கவனத்தில் கொள்ளாமை காரணமாக இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சில பாடங்களுக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முரண்பட்ட நேர அட்டவணை வெளியிடப்பட்டமையே பரீட்சார்த்திகளுக்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாகும்.

இருப்பினும் சரியான நேர அட்டவணையை உள்ளடக்கிய பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நேர அட்டவணையை பரிசீலனை செய்திருந்தால் இவ்வாறான சிக்கல் ஏற்பட்டிருக்காது என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

சிரமங்களுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் எதிர்பார்க்கும் நிவாரணம் தொடர்பிலான விடயங்கள் தற்பொழுது திரட்டப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers