திருகோணமலை - புல்மோட்டை, புடவைகட்டு பாலத்திற்கு அருகில் இன்று காலை முதல் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சூரை மீன்கள் தற்போது அதிகமாக பிடிபடும் காலப்பகுதியாகும். இதனால் பெரும்பாலான மீனவர்களின் வலைகளில் சூரை மீன்கள் பிடிபடுகின்றன.
இந்த நிலையில் நாம் சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி கடற்தொழிலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் பெரும்பாலானவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து போராட்டத்தை மேற்கொண்டு வந்த நிலையில், பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக போராட்டம் வீதியோரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.