இவரை தெரிந்தால் உடனடியாக அறிவியுங்கள்! பொலிஸார் கோரிக்கை

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் வசித்து வந்த பெண்ணொருவரை காணவில்லை என மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பெண்ணை காணவில்லையென தெரிவித்து, அவரது கணவர் கடந்த மாதம் 26ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

எனினும் மகாலிங்கம் நிஷாந்தினி என்ற அந்த பெண் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 070 3397960, 076 9746545 போன்ற இலக்கங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.