யாழில் உதவி செய்யப் போனவருக்கு நேர்ந்த பரிதாப நிலை

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் உதவி செய்ய முயன்ற நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி நுணாவில் மேற்கு மருதடிப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த 48 வயதான சுப்பிரமணியம் துரைரத்தினம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வீதியால் குறித்த நபர் நேற்று பயணித்துள்ளார். இதன்போது வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த சுப்பிரமணியம் மோட்டார் சைக்கிளை சரியான முறையில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

எனினும் சில மணிநேரங்களில் குறித்த மோட்டார் சைக்களின் உரிமையாளர், சுப்பிரமணியத்தின் வீட்டுக்கு கும்பல் ஒன்றுடன் சென்றுள்ளார்.

" எதற்காக மோட்டார் சைக்கிளை இடித்து விழுத்தி விட்டு வந்தாய் " என கேட்டு அவரை தாக்கியதுடன் , மோட்டார் சைக்கிளின் சேதத்தை திருத்த என அவர் போட்டிருந்த ஐந்து பவுண் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.