புத்தளத்தை தொடர்ந்து தலைமன்னாரில் கரையொதுங்கும் ஆபத்து

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in சமூகம்

தலைமன்னார் கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மருத்துவ கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

காலாவதியான மருந்துகள், மருந்து போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் ஊசிகள் போன்ற கழிவுப் பொருட்களே இவ்வாறு கரையொதுங்குகின்றன.

அத்துடன் இவை இந்திய உற்பத்தி பொருட்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த பொருட்கள் கரையோரத்தை அண்டி வாழும் மற்றும் கடல் தொழிலில் ஈடுபடும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த வாரம் புத்தளம் கடற்கரைப் பகுதியில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கிய செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.