உணவகமொன்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

புத்தளம் - ஆனமடுவ பகுதியிலுள்ள உணவகமொன்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் தனது மனைவிக்கும், உணவகத்திற்கும் தாக்குதல் நடத்தியதாக உணவக உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நடத்தப்பட்ட தாக்குதலின் போது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் உணவகத்தின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தினால் தனது உணவகத்திற்கு சுமார் 20 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.