மன்னாரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வு பணி

Report Print Ashik in சமூகம்

மன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 10ஆம் திகதி மாலையுடன் குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மீண்டும் இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு 53ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.